25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாழைத்தண்டு ஜூஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாழைத்தண்டு ஜூஸ்.

வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு சிறப்பான வழியாகும்.வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.மேலும், குடலில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. 

இதன் சாற்றை இரண்டு அல்லது மூன்று வேளை வீதம் தினமும் அருத்தினால். வறட்டு இருமல் நீங்கும்.நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டு சாறு ஒரு டம்ளர் குடித்தால் விஷம் தானாக இறங்கி விடும்.வாழைப்பூச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால், கை கால் எரிச்சல், வெள்ளைப்படுதல் மற்றும்மாத விலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும்.

வாழைத் தண்டில் கால்ஷியம் பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்களும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துகளும் உள்ளன.நரம்புகளில் தேங்கிநிற்கும் உப்பு படிவங்கள் நீங்கி பார்வையை தெளிவடையச் செய்யும்.வாழத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தை தூண்டி சுறுசுறுப்பு அடைய செய்யும்.

பித்தத்தை குறைக்கவும் உதவும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு, சூப் செய்து அருந்துவது நல்லது வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம் மூட்டு வலி வந்து கைகால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறை குடித்தால் மிகுந்த பயனளிக்கும்.

வாழைத்தண்டை சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தணியும்.வாழைத் தண்டை சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து, தீப்புண் மேல் பூசி வர தீப்புண் ஆறும். சீழ் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். இதன் பூவை பொரியல் செய்து உண்பதால் அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும் குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்று புழுக்களை ஒழிக்கும் திறன் கொண்டது. பித்த நோய்களையும் இருமலையும் நீக்கும்.

வாழைத்தண்டு காது சம்பந்தமான பிரச்னை, கருப்பை நோய்கள் மற்றும் ரத்தக் கோளறுகள் ஆகியவற்றை குணமாக்கும் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும் .

தேள்,பூரான் கடித்த இடத்தில் வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை பூச வலி குறையும்.வாழைத்தண்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வாழைத்தண்டு சாறு குடிப்பதால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாய்ப்புகள் உண்டு. இது இயற்கையான சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கப் பெரிதும் உதவுகிறது.

வாழைத்தண்டை ஜூஸ், பொரியல், கூட்டு, அல்லது அடை போன்ற பல்வேறு வடிவங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News